Friday, November 16, 2012


"லில்பர்ன் தமிழ்ப்பள்ளி லில்பர்ன்-ல் இருந்து டுலூத்-க்கு கடந்துவந்த பாதை” – முனைவர். இரவி பழனியப்பன்
 (Published in GATS 2012 Aandu Malar )


இறைப்பணியினும் மேலானது மொழிப்பணி. மொழி இருந்தால் இனம் இருக்கும். இனம் இருந்தால் கலாச்சாரம் இருக்கும். ஆதலால் செய்வோம் தமிழ்ப்பணி”. 

தமிழ் நாட்டில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்தாலும், அமெரிக்க மண்ணில் ‘அமெரிக்கத் தமிழ்’ வளரும் என்பது லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் தாரகமந்திரமாய் இருக்கிறது.

தொடக்கம்:
லில்பர்ன் தமிழ்ப்பள்ளி 1998-ஆம் ஆண்டு நான்கு குடும்பங்கள், தமிழ் தங்களது அடுத்த தலைமுறைக்கு செல்லவேண்டும் என்று முனைவர் உதயகுமார், முனைவர் செல்வராஜ் பெரியசாமி, முனைவர் அப்துல் ஜப்பார் மற்றும் முனைவர் மார்டின் வின்சென்ட் குடும்பங்கள் இணைந்து வீடே பள்ளியாய் ஏழு மாணவர்களுடன் ஒவ்வொரு வெள்ளி இரவும் நடத்தப்பட்டது. பின்பு 2004-இல் இரவி பழனியப்பன் மற்றும்  ரபீ மல்லீக் குடும்பங்கள், மேலும் ஆறு குடம்பங்களுடன் மொத்தம் 10 வருடங்கள் மிக சிறப்பாய் நடந்தது. பெரிய குழந்தைகள் பட்டங்கள் வாங்கிவிட 2007-இல் இருந்து ரவியின் தலைமயில் சிவா, வாணி பாஸ்கர் குடும்பங்கள் இணைய மீண்டும் சுழற்சி முறையில் வீடுகளில் நடந்தது. பின்பு பிள்ளைகள் எண்ணிக்கையின் காரணமாக 2008-ல் வாணி வீட்டிலும், பின்னர் 2009-இல் லில்பர்ன் சின்மயா மிசன் உடன் இணைந்து பெர்க்மார் உயர்நிலைப் பள்ளியிலும் நடந்தது.

அட்லாண்டா தமிழ் கிறிஸ்தவர் கோயிலில் நடைபெற்று வந்த நம் பள்ளியின் சகாப்தம்:
சின்மயா மிசன் மொழிப்பார்வையும், லில்பர்ன் தமிழ் பள்ளியின் மொழிப்பார்வையும் ஒத்துப்போகாமல் போக, லில்பர்ன் தமிழ்ப்பள்ளி இடமில்லாமல் தவித்தபோது தாயைப்போல அணைத்துக் கொண்டது அட்லாண்டா தமிழ் கிறிஸ்தவர் கோயில். கடந்த மூன்று வருடங்களாய் லில்பர்ன் தமிழ்ப்பள்ளி, தமிழ் கிறிஸ்தவர் கோயிலில் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் சிறப்பு தமிழ் கற்றுத்தருவது மட்டும் அல்லாமல் கற்ற தமிழ் நிலைக்க தமிழுடன் தலைமைப் பண்புகள், தமிழ்ப் பண்பாடுகள் மற்றும் வாழ்க்கை பாடமும் சேர்ந்தே கற்பிப்பதால் அனைத்து குடும்பங்களும் ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்தன.
ஜார்ஜியாவில் அங்கீகரிக்கப் பட்ட தமிழ் மொழி: 
நாம் கற்பிக்கும் தமிழ், தமிழ்நாட்டு தமிழிலில் இருந்து அமெரிக்க தமிழாக, இந்த மண்ணின் மொழியாக மாற, முதலில் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக வேண்டும். அதற்காக நம் பள்ளிகள் இணைந்து எடுத்துவைத்த முதல் படிதான் ‘ஜார்ஜியா அக்கிரிடிடேசன் கவுன்சிலிடம்’ அங்கீகாரம் வாங்கியது. இதற்கு மூன்று பள்ளிகளும் இணைந்து உழைத்தது மிகச்சிறப்பு. லில்பர்ன் தமிழ்ப்பள்ளியில் மொத்த வேலைகளை 21 பேர் தனித்தனியாக பிரித்து உழைத்தனர். இதில் மற்ற பள்ளிகளில் இருந்து தன்னார்வாலர்கள் உழைத்த கதை தனி. இதில் பலரும் பலவிதமாக உழைத்ததாலும் அங்கீகாரத்திற்காக ஒருங்கிணைந்த உழைப்பும் நோக்கமும்தான் பிரதானம். இதற்கெல்லாம் மேலாக அடுத்த கல்வியாண்டில் சில மாணவர்களேனும் மொழிக்கு வெகுமதி வாங்கினால், அதுதான் உழைத்தவர்களுக்கு கிடைக்கும் பரிசு.
டுலுத் இடைநிலைப் பள்ளி:
மொழி அங்கீகாரத்திற்கு பிறகு பள்ளி மேலும் வளர்ந்தது. அதனால் இட பற்றாக்குறை வர புதிய இடம் தேடவேண்டி வந்தது. டுலுத் இடைநிலைப் பள்ளியில் இடம் கிடைக்க செப்டம்பர் மாதம் புதிய இடத்திற்கு மாறியது. இதை ஒரு திறந்த வெளிப் பெரும் விருந்து வைத்து அனைவரும் கொண்டாடினர்.
வரும்காலம் மொழிக்காலம்:
இந்த ஆண்டில் ஒலிப்பு, மற்றும் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரு.பெரியண்ணன் சந்திரசேகர் வழிநடத்த, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து உழைக்கின்றனர்.

“வருங்காலத்தில் தமிழ் அட்லாண்டாவில் இருந்து தழைக்கும்” .